• Latest
  • Trending
  • All
உச்சகட்ட பதட்டத்தில் இலங்கை… அதிபர் மாளிகை முற்றுகை… கோத்தபய தப்பி ஓட்டம்!

உச்சகட்ட பதட்டத்தில் இலங்கை… அதிபர் மாளிகை முற்றுகை… கோத்தபய தப்பி ஓட்டம்!

July 9, 2022
டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

October 16, 2025
விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

August 29, 2025
வீர வணக்கம் பட விமர்சனம்

வீர வணக்கம் பட விமர்சனம்

August 29, 2025
வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

July 29, 2025
ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

July 28, 2025
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

July 28, 2025
‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

July 28, 2025
வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

July 28, 2025
அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

July 23, 2025
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

July 22, 2025
சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

July 18, 2025
ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

July 16, 2025
    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact
    INDIA  |  US EDITION
    Sunday, April 19, 2026
    Vanakkam India
    • Home
    • தலைப்புச் செய்தி
    • தமிழ் சினிமா
    • நம்ம ஸ்டேட்ல
    • விளையாட்டு
    • வணிகம்
    • விமர்சனம்
    No Result
    View All Result
    Vanakkam India
    No Result
    View All Result
    Home SRI LANKA

    உச்சகட்ட பதட்டத்தில் இலங்கை… அதிபர் மாளிகை முற்றுகை… கோத்தபய தப்பி ஓட்டம்!

    அண்டை நாடான இலங்கையில் இதுவரை காணாத பெரும் பதட்டம் நிலவுகிறது. அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், அதிபர் கோத்தபய தப்பி ஓடிவிட்டார். போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையைச் சூறையாடி வருகின்றனர்.

    by The Editor
    July 9, 2022
    in SRI LANKA, இலங்கை/புலம் பெயர் தமிழர்கள், இன்றைய பரபரப்பு, தலைப்புச் செய்தி
    0
    உச்சகட்ட பதட்டத்தில் இலங்கை… அதிபர் மாளிகை முற்றுகை… கோத்தபய தப்பி ஓட்டம்!
    526
    SHARES
    1.5k
    VIEWS
    Share on FacebookShare on Twitter

    கொழும்பு: சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்கள், தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டத்தொடங்கினர். பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கையில் மீண்டும் மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இதனால், இலங்கையில் மீண்டும் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் திண்டாட்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டம் மற்றும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக கடந்த மாதம் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபட்சே விலகினார்.

    அடுத்து இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்று கோரி கடந்த சில மாதங்களாகவே எதிர்க்கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக இன்று மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா உள்ளிட்ட பலரும் இப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    இந்தப் போராட்டத்தில் கோத்தபாய ராஜபக்சவின் அதிபர் மாளிகையை முற்றுகையிட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொழும்புவில் குவிந்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பும் செய்யப்பட்டது. இந்த நிலையில் அதிபர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள், காவல்துறை பாதுகாப்பை மீறி அதிபர் மாளிகைக்குள் நுழைந்துவிட்டனர்.

    போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைவதற்கு சிறிது நேரம் முன்பாகவே அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே ஆம்புலன்ஸ் மூலம் தப்பியோடியுள்ளார். அவர் ராணுவ தலைமையகத்தில் தஞ்சம் புகுந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத்தொடர்ந்து ராணுவ பாதுகாப்பையும் மீறி அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதோடு, அங்கிருந்த பொருட்களையும் சூறையாடினர். அதேபோல் போலீசாரிடம் இருந்து கலவர தடுப்பு வாகனத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் கொழும்புவில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், இலங்கை எம்.பி. ரஜிதா சேனரத்னாவை கடுமையாக தாக்கினர்.

    அதேபோல் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் போராட்டக்காரர்களில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட 33 பேர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு சூறையாடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரதமர் அலுவலகத்திற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    போராட்டம் மற்ற மாகாணங்களில் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கப்பலில் தப்பி ஓட்டமா?

    நிலைமை கையை மீறிப் போகும் என நேற்றே இலங்கை உளவுத்துறை தகவல் அளித்துவிட்டதால், விடிவதற்கு முன்பே கோத்தபாய குடும்பத்தினர் ஏராளமான தங்கம், வைரம், டாலர்களுடன் ஒரு கப்பலில் புறப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, ராஜபக்சேவும் கப்பல் மூலம் தப்பி ஓடும் காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது.

    Tags: Gotabaya RajapaksaProtestsSri Lankaஇலங்கைகோத்தபய ராஜபக்சேபோராட்டம்
    Share210Tweet132Share53
    The Editor

    The Editor

    Related Posts

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    by The Editor
    October 16, 2025
    0

    வித்தியாசமான மற்றும் நடிப்புக்குத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்களின்...

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    by The Editor
    August 29, 2025
    0

    RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், கமர்ஷியல்...

    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    by The Editor
    August 29, 2025
    0

    நடிகர்கள்: சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம்குமார், சுரபி லக்ஷ்மி, பிகே மேதினி, ஆதர்ஷ், சிதங்கனா, ஆஷ்விகா இசை: எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத் ஜேம்ஸ் வசந்தன்,...

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    by The Editor
    July 29, 2025
    0

    இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் சினிமாட்டிக் யுனிவர்சின மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்'. இப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர்...

    • Trending
    • Comments
    • Latest
    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    February 5, 2022
    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    June 13, 2022
    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    November 24, 2020
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    0

    The Scary Reason Healthy People Die After an ER Visit

    0

    Watch Justin Timberlake’s ‘Cry Me a River’ Come to Life in Mesmerizing Dance

    0
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    October 16, 2025
    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    August 29, 2025
    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    August 29, 2025
    Vanakkam India

    Copyright © 2009 Vanakkamindia Media

    Navigate Site

    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact

    Follow Us

    No Result
    View All Result
    • Home

    Copyright © 2009 Vanakkamindia Media

    Login to your account below

    Forgotten Password?

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In