• Latest
  • Trending
  • All
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்… லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்… லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி

December 29, 2023
ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

July 13, 2026
சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

June 18, 2026
சாருகேசி பட விமர்சனம்

சாருகேசி பட விமர்சனம்

June 18, 2026
Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

June 16, 2026
ரஜினியைச் சந்தி8தத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்

ரஜினியைச் சந்தி8தத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்

June 16, 2026
விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி கூட்டணியில் நூறு சாமி

விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி கூட்டணியில் நூறு சாமி

June 16, 2026
டபுள் ஆக்குபன்சி (Double Occupancy) விமர்சனம்

டபுள் ஆக்குபன்சி (Double Occupancy) விமர்சனம்

June 15, 2026
டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

October 16, 2025
விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

August 29, 2025
வீர வணக்கம் பட விமர்சனம்

வீர வணக்கம் பட விமர்சனம்

August 29, 2025
வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

July 29, 2025
ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

July 28, 2025
    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact
    INDIA  |  US EDITION
    Friday, July 31, 2026
    Vanakkam India
    • Home
    • தலைப்புச் செய்தி
    • தமிழ் சினிமா
    • நம்ம ஸ்டேட்ல
    • விளையாட்டு
    • வணிகம்
    • விமர்சனம்
    No Result
    View All Result
    Vanakkam India
    No Result
    View All Result
    Home இன்றைய பரபரப்பு

    72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்… லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி

    மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    by The Editor
    December 29, 2023
    in இன்றைய பரபரப்பு, தலைப்புச் செய்தி
    0
    72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்… லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி
    500
    SHARES
    1.4k
    VIEWS
    Share on FacebookShare on Twitter

    சென்னை: கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பலங்க முறை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மீண்டும் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

    முதலில் அவரது வீடு மற்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரின் உடல் பின்னர் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் சென்னை தீவுத்திடலில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அவரது உடல் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈவேரா சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிலையில் 6 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

    விஜயகாந்த் வாழ்க்கைக் குறிப்பு

    மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அழகர்சாமி என்ற அரிசி ஆலை முதலாளியின் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் விஜயராஜ். எம்ஜிஆர் படங்களின் தாக்கத்தால் சினிமா ஆர்வம் அதிகரித்தது. 1970களின் இறுதியில் இரு நிகழ்ச்சிகளுக்காக மதுரை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாதுகாவலராக இவர் பணியாற்றினார். அந்த நிகழ்வு மற்றும் மதுரையைச் சேர்ந்த பட விநியோகஸ்தர் மன்சூரின் தொடர்பு போன்றவற்றால் அவருக்கு இயல்பாகவே சினிமா ஆர்வம் அதிகரித்தது. திரைப்பட நடிகராகும் ஆசையில் சென்னைக்கு வந்தார் விஜயராஜ்.

    சென்னை வந்தவரை தமிழ் சினிமா உடனே அள்ளி அணைத்துக் கொள்ளவில்லை. எங்கு சென்றாலும் விஜயகாந்த் கறுப்பு என அவரது நிறத்தைக் காரணம் காட்டியே பலர் நிராகரித்தனர்.

    ஆனாலும் தொடர் முயற்சியால், 1979-ஆம் ஆண்டு எம். ஏ. காஜாவின் இயக்கத்தில் “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் நடித்து தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

    எம். ஏ. காஜாவிற்கு விஜயராஜ் என்ற பெயரில் விருப்பமில்லை; அந்தக் காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் புகழின் உச்சத்திலிருந்ததால் அவரது பெயரிலிருந்த காந்த் என்பதை எடுத்து, விஜயராஜ் என்ற பெயரில் இணைத்து விஜயகாந்த் எனப் பெயர் மாற்றம் செய்தார்.

    பின்னர் எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நாயகனாக நடித்தார். அந்தப் படம்தான் விஜயகாந்துக்கு முதல் திருப்புமுனை. பின்னர் ஏராளமான படங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிய வெற்றி கிடைத்தது, அதே எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் அவர் நடித்த சாட்சி படத்தில்தான். அதன் பிறகு பல வெற்றிப் படங்களில் நடித்த விஜயகாந்துக்கு பெரும் புகழைத் தந்தது ஆர் சுந்தரராஜன் இயக்கிய வைதேகி காத்திருந்தாள் படம். அதன்பிறகு ஏராளமான வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த முன்னணி நாயகனாகத் திகழ்ந்தார்.

    2004ம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களின் ஆதரவுடன் அவர் தேமுதிக எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். 3006 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக அவர் சட்டமன்ற உறுப்பினரானார். அதற்கு அடுத்து வந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 10 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிர வைத்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட விஜயகாந்த், 29 தொகுதிகளில் வென்று, எதிர்க்கட்சித் தலைவரானார்.

    ஆனால் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அவருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகிவிட்டது. தொடர் தோல்விகள் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

    2021-க்குப் பிறகு விஜயகாந்தின் உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது. அவர் சுயநினைவை இழக்கத் தொடங்கினார். 2023-ம் ஆண்டில் பலமுறை அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று வந்தார். சில வாரங்களுக்கு முன்பு விஜயகாந்த் முழுமையாக நினைவை இழந்தார் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் டிசம்பர் 27-ம் தேதி அவருக்கு சுவாசப் பிரச்சினை மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிர் பிரிந்தது.

    தலைவர்கள் இரங்கல்

    விஜயகாந்த் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாஸன், விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். மோடி தவிர மற்ற தலைவர்கள் மற்றும் திரையுலகினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    Tags: CremationVijayakanthஉடல் அடக்கம்மரணம்விஜயகாந்த்
    Share200Tweet125Share50
    The Editor

    The Editor

    Related Posts

    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    by The Editor
    July 13, 2026
    0

    ஷோயிங் பிசினஸ் (Showing Business) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயா, இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய 'பாகுபலி' படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா...

    சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

    சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

    by The Editor
    June 18, 2026
    0

    பிரபல தயாரிப்பாளரான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள எங்கள் தங்கம் திரைப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ்...

    சாருகேசி பட விமர்சனம்

    சாருகேசி பட விமர்சனம்

    by The Editor
    June 18, 2026
    0

    கர்நாடக இசை மேதை ஒருவரின் வீட்டில் நடக்கும் பிரச்சினைகள், ஏற்படும் சிக்கல்கள் அவற்றிலிருந்து அந்தக் குடும்பம் எப்படி மீள்கிறது என்பதை வைத்து பின்னப்பட்ட கதை இந்த சாருகேசி....

    Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

    Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

    by The Editor
    June 16, 2026
    0

    முதலில் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி- அவரது நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு ( Mana Sangara Vara Prasad Garu) திரைப்படத்தின் மூலம்...

    • Trending
    • Comments
    • Latest
    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    February 5, 2022
    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    June 13, 2022
    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    November 24, 2020
    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    0

    The Scary Reason Healthy People Die After an ER Visit

    0

    Watch Justin Timberlake’s ‘Cry Me a River’ Come to Life in Mesmerizing Dance

    0
    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

    July 13, 2026
    சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

    சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

    June 18, 2026
    சாருகேசி பட விமர்சனம்

    சாருகேசி பட விமர்சனம்

    June 18, 2026
    Vanakkam India

    Copyright © 2009 Vanakkamindia Media

    Navigate Site

    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact

    Follow Us

    No Result
    View All Result
    • Home

    Copyright © 2009 Vanakkamindia Media

    Login to your account below

    Forgotten Password?

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In